உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பெயரில் மாம்பழம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக மாம்பழ கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 700 வகை மாம்பழங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் யோகி ஆதித்யநாத்தை கவுரவிக்கும் வகையில் உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் விளையும் ஒரு மாம்பழ வகைக்கு 'யோகி மாம்பழம்' என பெயர் சூட்டப்பட்டது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அவர், நாட்டிலேயே அதிக அளவில் மாம்பழங்களை விளைவிக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம் தான் என தெரிவித்தார்,
திரிபுராவில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் நடந்த சாலைமறியல் போராட்டம் குறித்து செய்தி சேகரித்த சாந்தனு பவுமிக் என்ற தொலைகாட்சி நிருபர் ஒருவர் மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் சுதீப் தத்தா என்ற நிருபர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் கொல்லப்பட்டார். இருகொலை வழக்குகள் குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் அம்மாநில பா.ஜ. முதல்வர் பிப்லப் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நிருபர்கள் கொலை வழக்கை, சி.பி..ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. அம்மாநில உள்துறை அமைச்சர் ரத்தன் லால்நாத் இதற்கான அறிவிப்பை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளர்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv Facebook: https://www.fb.com/SathiyamNEWS Twitter: https://twitter.com/SathiyamNEWS Website: http://www.sathiyam.tv Google+: http://google.com/+SathiyamTV