சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் உயிரிழப்பு

  • 6 years ago
சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராயபேட்டை அருகே10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே கடக்க முயன்ற போது இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் காசிமேட்டை சேர்ந்த விகரம் என இளைஞர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த யோகேஷ்வரன் என்ற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended