டிவி ரிமோட்டில் மறைத்து வைத்து 400 கிராம் தங்கம் கடத்தல்- வீடியோ

  • 6 years ago
கொழும்புவில் இருந்து வந்த பயணியிடம் சுங்க இலாக்காதுறை நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தபோது எலக்ரானிக் பொருள் மற்றும் ரிமோட்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட 400 கிராம் தங்கத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இருந்து வரும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்துவதாக வந்த தகவலையடுத்து மதுரை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் வெங்கடேஷ்பாபு தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த லியாகத் அலி கான் மகன் அகமத் கனி என்பவரிடமிருந்து எலக்ரானிக் பொருள் மற்றும் ரிமோட்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட 400 கிராம். எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை கடத்தி வந்த அகமத்கனியை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Des: The customs inspectorate from Colombo came to investigate and seized 400 grams of gold smuggling in the Elektronik and Rimota seals.

Recommended