சிப்பாய் புரட்சியில் உயிர்நீத்த வீரர்களுக்கு நினைவு அஞ்சலி- வீடியோ

  • 6 years ago
முதல் சுதந்திர போராட்டம் என்றழைக்கப்படும் சிப்பாய் புரட்சி நினைவு தினத்தில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு சிப்பாய் புரட்சி நினைவு தூணில் ஆட்சியர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்

வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையில் 1806 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட முதல் சிப்பாய் புரட்சி ஜுலை 10 ஆம் நாள் நடைபெற்றது ஆங்கிலேயர் ஆட்சியில் 1806 ஆம் ஆண்டு மதராஸ் படைக்கு முதன்மை தளபதியாக இருந்த சர்ஜான் கிரேடக் என்பவன் ராணுவத்தில் சில புதிய விதிமுறைகளை அறிவித்தான் இதன் படி இந்துக்கள் கடுக்கன் அணிய கூடாது சமயசின்னங்களை நெற்றியில் அணிய கூடாது இஸ்லாமியர்கள் தாடியை அகற்றிவிட்டு மீசை வைத்துகொள்ள வேண்டும் அனைத்து ராணுவ வீரர்களும் தலையில் பசுத்தோல் சுங்கு குள்ளாய் அணிவதுடன் மார்பில் சிலுவை போன்ற சின்னம் அணிய வேண்டுமென உத்தரவிட்டதால் இந்திய ராணுவவீரர்கள் அனைவரும் இதனை எதிர்த்தனர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜுலை 10 ஆம் நாள் இந்திய ராணுவ வீரர்கள் சிப்பாய் புரட்சியை மேற்கொண்டனர் இதில் ஆங்கில வீரர்களை இந்திய வீரர்கள் கொன்றனர் கோட்டையில் ஆங்கில அரசின் கொடியை இறக்கிவிட்டு திப்புவின் புலிக்கொடியை ஏற்றினார்கள் இதனை அறிந்த ஆங்கிலேயர்கள் ராணிப்பேட்டையிலிருந்து காலப்பர் துப்பாக்கிகளை கொண்ட படைகளை கொண்டு கோட்டையில் புகுந்து புரட்சி செய்த ஆயிரக்கணக்கான வீரர்களை சுட்டுகொன்றனர் இந்திய ராணுவ அதிகாரிகளை தூக்கிலிட்டும் துப்பாக்கியால் சுட்டுகொன்றனர் இதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதால் ஜுலை 10 ஆம் நாள் சிப்பாய் புரட்சி தினமாக அனுசரித்து வேலூர் கோட்டையின் வெளியே உள்ள சிப்பாய் புரட்சி நினைவு தூணில் உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

Recommended