ஐசிசியின் ஹால் ஆப் ஃபேம் கவுரவம் சமீபத்தில் இந்திய நெடுஞ்சுவர் ராகுல் டிராவிடுக்கு வழங்கப்பட்டது. இதுவரை ஐந்து இந்தியர்கள் மட்டுமே இந்த கவுரவத்தைப் பெற்றுள்ளனர். அதெல்லாம் சரி, அப்ப சச்சின் டெண்டுல்கர் செய்ததெல்லாம் சாதனையில்லையா, அவரை ஏன் சேர்க்கவில்லை என்று கிரிக்கெட் கடவுளின் பக்தர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சங்கமான ஐசிசி. கிரிக்கெட் சாதித்த வீரர்களுக்கு ஹால் ஆப் ஃபேம் என்ற பிரபலமான வீரர்கள் பட்டியலில் சேர்க்கிறது. இந்தப் பட்டியில் இந்தியாவில் இருந்து கபில் தேவ், சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி, அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
Dravid, Ponting and Taylor inducted into ICC Cricket Hall of Fame