கிருஷ்ணகிரியில் பார்வையாளர்களை ஈர்த்த நாய்கள் கண்காட்சி-வீடியோ

  • 6 years ago
கிருஷ்ணகிரியில், மாங்கனி திருவிழாவையொட்டி, கால்நடை துறை சார்பில், நடைபெற்ற நாய்கள் கண்காட்சியினை ஏராளமானோர் கண்டுகளித்தனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இந்த நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில், டாபர்மேன், ஜெர்மன் செப்பர்ட், லேப்ராடு, சிப்பிப்பாறை, லேபர்டாக், கிரேடன், டேஸ், என்டி, பெமோரியன், லசாப்சோ, சைபீரியன் அஸ்கி, ரேட்வீலர் உட்பட பல்வேறு வகையைச் சேர்ந்த 120 நாய்கள் பங்கேற்றன. மொத்தமாக 16 வகையிலான நாய்கள் பங்கேற்றிருந்தன.

Recommended