வைகைக்கும் ஆப்பு...அசையுமா பாண்டி அரசு...வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது போல் காரைக்காலில் உள்ள வைகை குளோரைடு ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்களும் சட்டமன்ற உறுப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு...

காரைக்கால் பகுதியில் மேலக்காசாக்குடி பகுதியில் வைகை குளோரைடு என்ற ரசாயண தொழிற்காலை இயங்கி வருகிறது. இத் தொழிற்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக பாய்லர்கள் வெடிப்பது தீபிடித்து எரிவது பேன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவில் இந்த ஆலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்களும் தீயணைப்பு துறையினரும் தீயை அணைத்தனர். பின்னர் தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தும் ஆலையை மூட வேண்டும் என்று கூறி அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் சந்திய பிரியங்காவும் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார். போராட்டம் நடத்துபவர்களை காவல்துறை அதிகாரிகள் எவளவோ சமானம் செய்தும் அவர்கள் ஆலையை மூட வேண்டும் என்று கூறி போராடத்தை கைவிட மறுத்துள்ளனர். மேலும் ஆலையை மூடும்வரை போராட்டம் நடக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended