Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
கர்நாடகா சட்டசபை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பாஜகவும் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நடகா சட்டசபை தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அரசியல் அதிரடிகள் அரங்கேறி வருகின்றன. அம்மாநில முதல்வர் குமாரசாமி இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

அதற்கு முன்னதாக சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ்- ஜேடிஎஸ் சார்பில் காங்கிரஸின் கே.ஆர். ரமேஷ் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். திடீர் திருப்பமாக பாஜகவின் சுரேஷ்குமாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

Former minister Suresh Kumar has filed nomination for Karnataka Assembly Speaker Post.

Category

🗞
News

Recommended