எடியூரப்பாவை விலக சொன்னது கட்சி தலைமைதானாம்...காரணம் இதுதாங்க!- வீடியோ

  • 6 years ago
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தானாக பதவி விலக முன்வரவில்லையாம். கட்சி தலைமை உத்தரவுக்கிணங்க அவர் பதவி விலகுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் போட்டியிட்ட கட்சிகளை காட்டிலும் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். இதற்கு காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எடியூரப்பாவின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி கட்சி தலைமை உத்தரவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. குதிரை பேர ஆதாரங்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டே இருப்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் அதிகரிப்பதால் பாஜக தலைவர்கள் கவலையடைந்ததன் விளைவு எடியூரப்பாவை ராஜினாமா செய்ய உத்தரவிட்டது.

BJP feels the public perception has gone against them due to horse trading attempts and evidences surfaced. According to reports, BS Yeddyurappa has been instructed to resign as horse-trading charges were being levelled at the BJP. This decision may have been taken to avoid embarrassment to the party.

Recommended