அன்னதானம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம்-வீடியோ

  • 6 years ago
விருத்தாச்சலம் அருகே வி.சாத்தமங்கலம் கோயில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறு உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சாத்தமங்கலம் பகுதி மாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் நேற்றிரவு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே ஒவ்வொருவராக மயக்கடைந்து கீழே விழ தொடங்கினர்.

Recommended