உச்சநீதிமன்றத்திற்கு கேரளாவைச் சேர்ந்த நீதிபதி கே.எம்.ஜோசப்பை நியமிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு அதற்காக அடுக்கி வைத்துள்ள காரணங்கள் படு சொத்தையாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பதுதான் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் முன்பு வைத்துள்ள முக்கிய பாயிண்ட் ஆகும். ஆனால் என்னவோ கேரளாவால்தான் மற்ற மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் தருவதில் பெரும் தடங்கல் ஏற்படுவது போல மத்திய அரசு செய்யும் பில்டப் பெரும் சொத்தையாக இருப்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெரிகிறது. வட மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகளே உச்சநீதிமன்றத்தில் அதிகம் உள்ளனர். அதேசமயம், தமிழ்நாடு, கேரளா என்று எடுத்துக் கொண்டால் தலா ஒரு நீதிபதிதான் இருக்கிறார்.