Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்வதைக் கண்டித்தும் நீதிமன்றம் சீண்டாதபடி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியும் சென்னையில் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங், இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு. தமிழரசன், ஆதித் தமிழர் மக்கள் கட்சியின் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் அண்மையில் திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. வட இந்தியாவில் தலித்துகள் போர்க்கோலம் பூண்டனர்.


VCK lead Dalit movements Federation staged protest over SC/ST Act in Chennai on Tuesday.

Category

🗞
News

Recommended