சென்னை அடையாறில் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை முயற்சி...வீடியோ

  • 6 years ago
சென்னை அடையாறில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் மர்ம நபர் ரஒருவர் துப்பாக்கி முனையில் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ. 6 லட்சம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்துடன் தப்பியோட முயன்ற நபரை போக்குவரத்து காவல்துறையினர் மடக்கிப் பிடித்ததையடுத்து அந்த நபரிடம் சாஸ்திரி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வாரத்தின் முதல் நாள் என்பதால் சென்னை அடையாறில் உள்ள இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தவும் எடுக்கவும் வரிசையில் காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டியுள்ளார். வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கியை காட்டி மர்ம நபர் மிரட்டியுள்ளார்.



Unknown person threatened at Chennai Indian bank with the gun robbed Rs. 6 lakhs and caught by police, he is under investigation now.

Recommended