பிறந்த நாளன்று உண்ணாவிரதம் இருக்கும் ஆந்திர முதல்வர்-வீடியோ

  • 6 years ago
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் பாஜகவும் கூட்டணி வைத்தன. இதில் மத்தியில் பா.ஜ.க.வும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. பா.ஜ.க.வும், தெலுங்கு தேசமும் கூட்டணி கட்சிகள் என்பதால், ஆந்திரா மாநிலத்துக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

Recommended