நாடாளுமன்றம் முடக்கியது சாதனை ! தம்பிதுரை பெருமிதம்- வீடியோ

  • 6 years ago

காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை 21 நாட்கள் முடக்கி சாதனை படைத்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்

கரூரில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது பேசிய அவர் உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சனைக்கு உடனடியாக மத்திய அரசு தீர்வு காணவேண்டும் என கூறியிருக்கிறது.இதனால் இனியும் மத்திய அரசு காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அலட்சியபடுத்த முடியாது என்றார்.மேலும் காவிரி விவகாரத்தில் அதிமுக தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என்றும் நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்து 21 நாட்கள் முடக்கி சாதனை படைத்துள்ளோம் என்றும் இதற்கு மேல் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்

DES: Lok Sabha Deputy Speaker Thambidurai said Parliament has 21 days record in cauvery dispute

Recommended