விவசாயிகளை வைத்து காமெடி பண்ண வெங்கட்பிரபு- வீடியோ

  • 6 years ago
தமிழகம் முழுக்கவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு முறைகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது பலத்த விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.
இது தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ், இயக்குநர் வெங்கட்பிரபுவை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் பலரும் கொதித்துள்ளனர்.
"நேற்று நடந்த போராட்டங்களில் நிறைய பேரிடம் பொதுநலமின்றி சுயநலமே தெரிகிறது. அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள் ப்ளீஸ்.. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடுபவன் விவசாயி! வெங்கட்பிரபு சார், நல்லா சி.எஸ்.கே-வை ரசிங்க அது உங்கள் உரிமை. விவசாயிகளை காமெடி பண்ணாதீங்க!" என ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு, "சார், சத்தியமா நான் விவசாயிகளை வைத்து காமெடி பண்ணலை. அந்தமாதிரி கேவலமான எண்ணம் எனக்குக் கிடையாது. நான் சொல்றது யாருங்குங்கிறது உங்களுக்கே புரியலைங்கிறது தான் வருத்தமா இருக்கு" எனத் தெரிவித்துள்ளார்.
"ஓகே சார், விவசாயம் பண்ண முடியாம ஓடி வந்தவங்கள்ல நானும் ஒருத்தன். அந்த வலி. சக சகோதரனும் இப்படியான்னு நெனச்சேன். சினிமா எப்படி பொழுதுபோக்கு ஊடகமோ அதே மாதிரி விளையாட்டும். அத நம்ம பாக்க கூடாதுனு சொல்ல முடியாது. அது எனக்கும் புரியுது. நாடகமும் புரியுது." எனக் கூறியுள்ளார்.
காவிரி போராட்டம் நடைபெறும்போது கவன ஈர்ப்புக்காக ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும்போது, "நான் ஒண்ணும் சொல்லலப்பா" என நையாண்டியாக ட்வீட் செய்த வெங்கட்பிரபுவை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.


There are continuous protests in various ways to set up the CMB. In this case, the protest against the IPL match yesterday has met with strong criticism. In this case, Director Pandiraj has criticized director Venkat Prabhu on Twitter.

#venkatprabhu #pandiarajan #cauvery

Recommended