சிரியாவின் அரசு விமான படைத்தளத்தில் அமெரிக்கா தாக்குதல்- வீடியோ

  • 6 years ago
சிரியாவின் தைமூர் ராணுவ விமான படைத்தளத்தின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் 100க்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை 1200 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த போர் இடையில் சில நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்தது.


Recommended