பிரபாஸுக்காக பாலிவுட் வாய்ப்பை கைவிட்ட அனுஷ்கா!

  • 6 years ago
பிரபாஸ் செய்த காரியத்தால் அவருக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் உள்ளது என்று ரசிகர்கள் மீண்டும் பேசத் துவங்கியுள்ளனர். பாகுபலி படத்தில் நடித்தபோது பிராபஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது. ஆனால் அதை சம்பந்தப்பட்ட இருவருமே உறுதி செய்யவில்லை. மாறாக நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று மட்டும் கூறினார். மக்கள் தொடர்ந்து பேசுவதை பார்க்கும்போது ஒரு வேளை நான் அனுஷ்காவை காதலிக்கிறேனா என்ற சந்தேகம் கூட எனக்கு வந்தது என்று பிரபாஸ் ஒரு முறை தெரிவித்திருந்தார்.அனுஷ்காவுக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம். இது குறித்து அறிந்த பிரபாஸ் அந்த வாய்ப்பை ஏற்க வேண்டாம் என்று கூற அனுஷ்காவும் அப்படியே செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அனுஷ்கா தன்னுடன் சேர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாக வேண்டும் என்று பிரபாஸ் விரும்புகிறாராம். பிரபாஸ் செய்த காரியத்தை பார்த்த ரசிகர்கள் அவரும், அனுஷ்காவும் காதலிப்பதாக மீண்டும் பேசத் துவங்கியுள்ளனர்.

People have started talking about Prabhas and Anushka once again. Anushka has reportedly rejected a Bollywood offer after Prabhas asked her to do so.

Recommended