அட்லீயின் அடுத்த படமும் விஜய்யுடன்தான். ஆனால்..,

  • 6 years ago
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மூன்று மெகா ஹிட் படங்களைக் கொடுத்தவர் என்ற 'பெருமை' (எல்லாமே காப்பி என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும்) அட்லீக்கு உண்டு. ராஜா ராணி, தெறி மற்றும் மெர்சல்... இந்த மூன்று படங்கள்தான் அவருக்கு விசிட்டிங் கார்ட். அடுத்த படத்தையும் விஜய்யை வைத்து உருவாக்கத்தான் திட்டமிட்டிருந்தார் அட்லீ. ஆனால் உடனே வேண்டாம்... இரண்டாண்டுகள் இடைவெளிவிட்டு பண்ணலாம் என விஜய் யோசனை கூறியதால், இப்போது தெலுங்குப் பக்கம் கவனம் திருப்பியிருக்கிறார் அட்லீ. தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவரை வைத்து தனது புதிய படத்தை உருவாக்கப் போகிறாராம். அந்தப் படத்தை முடித்துவிட்டு, மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஒரு மெகா பட்ஜெட் படத்தை தரப் போகிறாராம். அட்லீயின் இந்த தெலுங்குப் படம் வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என்கிறார்கள்.

Director Atlee is planning to direct a Telugu movie at the end of this year.

Recommended