ஸ்மித்துக்கு ஆதரவாக கடிதம் அனுப்பிய டு பிளசிஸ்

  • 6 years ago
கிரிக்கெட் விளையாட ஒரு வருடம் தடைபெற்று இருக்கும் ஸ்மித்திற்கு தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளசிஸ் வாட்ஸ் ஆப் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார். அதேபோல் தென்னாப்பிரிக்க வீரர்கள் பலர் அவருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒருவருடம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் கேமரூனுக்கு 9 மாதம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுக்க இனி வார்னர் கேப்டன், துணை கேப்டன் போன்ற தலைமை பொறுப்புகளை வகிக்க முடியாது. தடை முடிந்து மேலும் ஒருவருடம் ஸ்மித் கேப்டனாக இருக்க முடியாது.

Recommended