அப்பல்லோவில் ஜெயலலிதா இட்லி, பொங்கல் சாப்பிட்டாரா?- வீடியோ

  • 6 years ago
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை நேரில் பார்த்தவர்கள், பேசியவர்கள் இப்போது வரிசையாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்து வருகின்றனர். ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் 55 பக்கங்கள் அடங்கிய வாக்குமூலத்தை பிரமாணப்பத்திரமாக சசிகலா தாக்கல் செய்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் சசிகலா ஜெயலலிதாவை பார்த்தவர்கள் யார், யார் என்று குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து சசிகலா வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளவர்களை அழைத்து விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்து சம்மன் அனுப்பி வருகிறது. ஏடிஎஸ்பி வீரபெருமாளுக்கு கடந்த வாரம் ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்பேரில், ஏடிஎஸ்பி வீரபெருமாள் நேற்று காலை 10.20 மணியளவில் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

The panel has summoned Jayalalithaa's personal security officer ADSP Veeraperumal to appear before the commission on Tuesday.This is after an affidavit submitted by VK Sasikala,stating the PSO was one of the persons who had seen Jaya in Apollo Hospital during the period of her treatment in 2016.

Recommended