காவிரியாற்றில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செக்கானூர் தடுப்பணையில் தடுக்கப்பட்டு மீன் உற்பத்தி நடைபெறுகிறது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் நாட்டாமங்கவம் காவிரிகிராஸ் மாதையின்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் காவிரி நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் காவிரியாற்றின் இருபுறத்திலும் கட்லா ரொகு ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் செத்து கரை ஓதுங்கி கிடக்கின்றன. இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டதோடு நோய் தோற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அவற்றை உடனடியாக அகற்றாவிட்டால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என கூறும் மக்கள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். கடந்த வாரம் இதைப்போல் சுமார் 5 டன் மீன்கள் செத்து மிதந்தன. காவிரி கரையோரம் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகளாலேயே மீன்கள் செத்து மிதப்பதாக புகார் எழுந்தது.
des : People are shocked by the flooding of the fish in Kaviyarai.