நடராஜன் இறப்பிற்கு அதிமுக அமைச்சர்கள் வரவில்லை என புலம்பிய சசிகலா- வீடியோ

  • 6 years ago
கணவர் நடராஜன் இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 5 அமைச்சர்களாவது வருவார்கள் என தாம் எதிர்பார்த்ததாக சொந்தங்களிடம் நொந்து புலம்பியிருக்கிறார் சசிகலா. 'பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வர வேண்டும் என்றால், நடராஜன் மரணத்தை உறுதிப்படுத்தி எம்.பி ஒருவர் கையெழுத்திட்ட கடிதம் வேண்டும்' என சிறைத்துறை விதிகள் அறிவுறுத்தியது. இதையடுத்து, அ.தி.மு.க எம்.பிக்களில் பலரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதும், கையெழுத்திட மறுத்துவிட்டனர். இதையடுத்து, கோவை அ.தி.மு.க எம்.பி நாகராஜ், பரோல் விடுப்புக்கான மனுவில் கையெழுத்திட்டார். கூடவே, நடராஜனின் இறுதி நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார். நேற்று தஞ்சையில் பேட்டியளித்த சீமான், ' அ.தி.மு.கவின் ஒரு எம்.பிகூட பரோலுக்காக கையெழுத்திடவில்லை. தமிழ்நாட்டில் பண்பாடற்ற அரசியல் நடக்கிறது' எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.

Sasaikla who expected atleast Five Tamilnadu Ministers attend at her husband Natarajan Funeral. But Ministers not attending the funeral.

Recommended