காலா டீஸர் பற்றிய ஒரு அலசல் : #kaalateaser

  • 6 years ago
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 'காலா' படத்தில் ஹூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, சுகன்யா, ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். 'காலா' டீசரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களும், ரஜினியின் ஸ்டைலும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. 'காலா' டீசரில் வந்த காட்சிகளில் ரஜினி தனது கையில் காதலியின் பெயரை பச்சை குத்தியுள்ளார். இதை சமூக வலைதளங்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர். வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தனுஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 'காலா' டீசர் நேற்று இரவு லீக் ஆனதைத் தொடர்ந்து உடனடியாக டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் தனுஷ். அதன் பிறகு ஈஸ்வரி ராவ்வை திருமணம் செய்து கொள்கிறார். ரஜினி - ஈஸ்வரி ராவ் தம்பதியினருக்கு 'வத்திக்குச்சி' திலீபன் மகனாக நடித்திருப்பார் எனத் தெரிகிறது. ரஜினியின் முன்னாள் காதலும் படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசரில் ஹூமா குரேஷி திரும்பிப் பார்க்கும் காட்சியும் இடம் பெற்றிருக்கிறது. ரஜினி மற்றும் ஈஸ்வரி ராவ் காரில் அமர்ந்தபடி விழா ஒன்றை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது அடுத்த கட்-டில் திரும்பவும் ஹூமா குரேஷி வருகிறார்.


Rajinikanth's 'Kaala' teaser was celebrated by fans. In 'Kaala' Teaser, Rajini puts tattoo by his former lover name in his hand. Huma Qureshi is his former lover.

Recommended