சஜல் அலியை தனது 3வது மகளாக பார்த்த ஸ்ரீதேவி!- வீடியோ
  • 6 years ago
ஸ்ரீதேவி வழக்கத்திற்கு மாறாக ஒரு முறை நடந்தது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.
இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் பாலிவுட்டில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீதேவி. அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து மாம் என்ற படத்தில் நடித்தார்.
மாம் படம் இங்கிலிஷ் விங்கிலிஷ் போன்று ஓடவில்லை.
படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீதேவி எப்பொழுதும் அமைதியாக இருப்பார். யாருடனும் அவ்வளவாக பேச மாட்டார். ஆனால் மாம் படத்தில் நடிக்கும் போது மட்டும் ஸ்ரீதேவி அப்படி இல்லை. தாயை இழந்த சஜல் அலியை தன் மகள் போன்று பார்த்துக் கொண்டார் ஸ்ரீதேவி. படப்பிடிப்பில் யாருடனும் நெருங்கிப் பழகாத ஸ்ரீதேவி சஜல் அலியை தனது 2 மகள்களோடு சேர்த்து மூன்றாவது மகளாகவே பார்த்தது அனைவரையும் வியக்க வைத்தது. ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த சஜல் அலி மீண்டும் என் அம்மா இறந்துவிட்டார் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சஜல் ஸ்ரீதேவியை தனது சொந்த அம்மாவாகே பார்த்தார்.


Sridevi normally doesn't mix with her collegaues in the shootingspot. But during the shooting of Mom she considers her reel daughter Sajal Ali as a real daughter and showered her with love.

Recommended