இந்தியாவின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவியின் மரணம் திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும்ம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவி மாரடைப்பில் தான் உயிரிழந்தாரா என்பது உறுதிபடுத்தப்படவில்லை என்று துபாயில் இருந்து வெளிவரும் கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் கந்தக பூமியாம் சிவகாசியில் பிறந்து தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலமாந்து, பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது 54 வயதில் மாராடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அவர் தங்கியிருந்த எமிரட்ஸ் டவர்ஸ் ஹோட்டல் அறையின் குளியல் அறையில் மயக்கம் போட்டு விழுந்ததாக சொல்கிறது கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை.