நட்புனா என்னன்னு தெரியுமா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது

  • 6 years ago
மலையாளத்தில் இருந்து வருகிறவர்கள் எல்லாம் பயங்கரமான பேய் மாதிரி என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். சிவகுமார் இயக்கத்தில் கவின், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நட்புனா என்னன்னு தெரியுமா. படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, வெளிநாடுகளில் இருந்து தயாரிப்பாளர்கள் வந்தால் ஒரு காக்கா கூட்டம் அவர்களை வந்து சுற்றி நிற்கும். அவர்கள் தயாரிப்பாளர் ரவியிடம் சொன்னது, யாரிடம் வேண்டுமானாலும் டைரக்ட் பண்ணுங்க. மிஷ்கினிடம் மட்டும் போயிடாதீங்க என்று தெரிவித்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் மீது தனிப்பட்ட வகையில் எனக்கு கோபம் இல்லை. கலையை திருடுவது என் மகளை என் கண் முன்னே நிர்வாணமாக்கிப் பார்ப்பது போன்று என்றார் மிஷ்கின்.

Director Mysskin said that malayalam artistes are ever hungry for acting and it is difficult to satisfy them. He said so in Natpuna Ennanu Theriyuma audio launch.

Recommended