சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்- வீடியோ
  • 6 years ago
தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் ஏற்கனவே அறிவித்ததுபடி, இன்று வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஆறு மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. மண்டல அளவில் வாடகை ஒப்பந்தம் நடந்த வலியுறுத்தி தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தென்மண்டல சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.


LPG Tanker Lorries strike from today. The Strike announced by the lorry operators because of the Centre decision to change the tender process regard.
Recommended