Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
ஜெயா டிவி உட்பட தம் வசம் இருந்த பொறுப்புகளை தினகரன் தட்டிப் பறித்து வருவதால் இளவரசி மகன் விவேக் கடும் கொந்தளிப்பில் இருக்கிறாராம். இது தொடர்பான பஞ்சாயத்தில் ஆத்திரமடைந்த விவேக், பழையபடி பெங்களூருவுக்கு போய் கடை கடையாக சிகரெட் போட போகிறேன் எனவும் சீறினாராம்.

சசிகலா சாம்ராஜ்யத்தின் நிறுவனங்களை நிர்வகிக்கும் முன்னதாக பெங்களூருவில் ஐடிசி நிறுவனத்தில்தான் விவேக் பணிபுரிந்து வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்த போதுதான் விவேக் இந்த சாம்ராஜ்யத்துக்குள் அழைக்கப்பட்டார்.அடுத்தடுத்து ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி நிர்வாகம் என விவேக்கின் பாதை ஏறுமுகமாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா சாம்ராஜ்ய நிறுவனங்களை கைப்பற்றுவதில் ஆள் ஆளுக்கு போட்டி போட்டு வருகின்றனர்.

Sources said that Ilavarasi son Vivek Jayaraman was very upset over RK Nagar MLA Dinakaran

Category

🗞
News

Recommended