ரவுடிகளை தூக்கிய போலீஸுக்கு நடிகர் விஷால் பாராட்டு- வீடியோ

  • 6 years ago
தேடப்படும் ரவுடிகளான பினு உள்பட 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்த போலீஸாருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரவுடி பினு மீது ஏராளமான கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அவர் தனது கூட்டாளிகளுடன் பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில் பிறந்த நாள் கொண்டாட வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ரவுடிகளை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி முனையில் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் போலீஸாரின் செயல்பாட்டை நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் , பயங்கர ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் இருந்த ரவுடிகளை சென்னை போலீஸார் சுற்றி வளைத்த நடவடிக்கை மிகவு்ம அற்புதமான ஒன்று. போலீஸாரின் இந்த நடவடிக்கை என்னை மிகவும் கவர்ந்தது.


Actor Vishal says in his tweet that Truly inspired by de fantastic raid operation by de Chennai Police 2 arrest 67 Rowdies who were caught red handed wit dangerous arms & ammunitions.I humbly congratulate the Commissioner of Police,Mr AK Viswanathan for his great leadership & DCP Mr Sarvesh for this tremendous job.

Recommended