வாஷிங்டன்னில் திடீர் ராணுவ அணிவகுப்பால் அதிர்ச்சி- வீடியோ

  • 6 years ago
தலைநகர் வாஷிங்டன்னில் திடீரென பெரிய அளவிலான ராணுவ அணிவகுப்பை நடத்த உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். போர் வெற்றிக்கு பிறகு அதை கொண்டாடும் வகையில்தான் வாஷிங்டன்னில் அமெரிக்க ராணுவம் அணிவகுப்பு நடத்துவது வழக்கம். ஆனால் இப்போது ஏன் அதை நடத்த ட்ரம்ப் கூறியுள்ளார் என்பது புரியாத புதிராக உள்ளது. எதிர்க்கட்சிகள், இந்த நடவடிக்கையை ராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளன.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைதான், முதலில், ட்ரம்ப் அரசு இதுபோன்ற ஒரு அணி வகுப்பை நடத்த உள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. இப்போது வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா சேண்டர்ஸ் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். அமெரிக்காவின் ராணுவத்தினர் தினசரி உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு ட்ரம்ப் ஆதரவாக இருப்பார் என்று, சாரா கூறியுள்ளார்.

US President Donald Trump has asked the Pentagon to organise a large military parade in the nation's capital

Category

🗞
News

Recommended