Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
மதுரையில் வருகிற 21ம் தேதி கமல் தொடங்க உள்ள முதல் அரசியல் பொதுக்கூட்டத்தை ஒட்டி சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக கட்சிக் கொடியின் நிறத்தை பிரதிபலிக்கும் வகையில் அந்தந்த கட்சியரின் பெயர்கள் சுவர் விளம்பரங்களில் அந்த நிறங்களில் வரையப்படும். இதே போன்று கமலுக்கான சுவர் விளம்பரத்தில் கறுப்பு நிறத்திற்குள் காவி அடங்கும் விதத்தில் கமல்ஹாசனின் பெயர் எழுதப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் இந்த மாதம் 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். அன்றைய தினம் ராமேஸ்வரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி கட்சியின் கொடி மற்றும் பெயரை அறிவித்த கையோடு 'நாளை நமதே' பயணத்தை தொடங்க உள்ளதாகவும் கமல் அறிவித்தார்.

Madurai is getting ready for Kamalhaasan's frist political meeting

Category

🗞
News

Recommended