ரயில்வே பட்ஜெட் சரியா? தவறா? மக்கள் கருத்துக்கள்- வீடியோ

  • 6 years ago
மத்திய அரசு பட்ஜெட்டில் ரயில்வே குறித்த அறிவிப்புகளில் தென்னக ரயில்வேக்கு ஒருசில சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மத்திய அரசு நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அதாவது பட்ஜெட்டை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தென்னக ரயில்வேக்கு முக்கியதுவம் கொடுத்து பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று எதிர்பாத்ததாகவும் ஆனால் பட்ஜெட்டில் தென்னக ரயில்வேக்கு பெரும்பாலான சலுகைகள் வழங்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


ரயில்வே பட்ஜெட் குறித்து ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கூறும் போது இந்திய அளவில் அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட் வரவேற்க தக்கதாக உள்ளதாகவும் தற்போது தென்னக ரயில்வேக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை அதிகமாக்கி இருக்கலாம் என்று கூறினார்.


Des : The public has alleged that the government has been disappointed with only a few concessions to the Southern Railway in the Rail Budget announcements.

Recommended