உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது-அமைச்சர் சி.வி.சண்முகம்- வீடியோ

  • 6 years ago
திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள ஓமந்தூரார் மணிமண்டபத்தில் உள்ள ஓ.பி. ராமசாமி ரெட்டியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அமைச்சர்கள் சிவி சண்முகம், கடம்பூர் ராஜூ, பா.பாலகிருஷ்ணா ரெட்டி
திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் 124-ஆவது பிறந்த நாள் விழா, தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், கடம்பூர் ராஜு, பா.பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு ஓ.பி.ராமசாமி ரெட்டியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த பெருந்தலைவர்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகச் செம்மல்கள் உள்ளிட்டோரது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்து தமிழகத்தின் முதல் முதல்வராக விளங்கிய ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக நிகழ் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. செல்வந்தரான ஓ.பி.ராமசாமி ரெட்டியார், சட்டம் பயின்றதால், இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவர் 1947-இல் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று 1949 வரை பதவி வகித்தார்.
விவசாயிகள், ஏழை, எளியோர் முன்னேற்றத்துக்காக சிந்தித்து, உழைப்பு, நேர்மை, விவசாயத்தில் ஆர்வம், சன்மார்க்க வழி, நீதி தவறாமை ஆகிய குறிக்கோள்களுடன் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் எனக் கருதிச் செயல்பட்டார்.

O. P. Ramaswamy Reddiyar birthday celebration in tindivanam.

Recommended