நாகலாந்து சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு ... பாஜக திடீர் பல்டி - வீடியோ

  • 6 years ago
நாகலாந்து சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு முடிவை திடீரென பாஜக மாற்றிக் கொண்டுள்ளது. தேர்தல் புறக்கணிப்பு தீர்மானத்தில் கையெழுத்திட்ட கேட்டோ செமாவை பாஜக கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளது.

நாகாலாந்தின் பல பகுதிகள் அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம் மற்றும் மணிப்பூரில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை இணைத்து நாகாலிம் என்ற அகன்ற நாகாலாந்து அமைக்க வேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் கோரிக்கை. அகன்ற நாகாலாந்து என்ற தனிநாடு அமைக்க வேண்டும் என்பது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் போன்ற ஆயுதக் குழுக்களின் இலக்கு.

இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. ஆனால் பிரச்சனை முடிவுக்கு வந்தபாடில்லை. இதனால் பிரச்சனை தீரும்வரை சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என நாகா பழங்குடி மக்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

BJP pulled out of the 11-party joint declaration that the Boycott of Nagaland Assembly Elections.

Recommended