பிலிப்பைன்ஸில் லாவாக்களை கக்கி வரும் மாயோன் எரிமலை இன்னும் ஒரு சில நாட்களில் வெடித்து சிதறும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பிலிப்பைன்ஸின் அல்பே மாகாணத்தில் உள்ளது மாயோன் எரிமலை. இந்த எரிமலை கடந்த 2 வாரங்களாக சாம்பலையும் கரும் புகை மூட்டத்தையும் கக்கி வருகிறது. இதனால் எரிமலையை சுற்றி 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 84 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கள் கிழமை பிற்பகலில் இந்த மாயோன் எரிமலை திடீரென வெடித்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீர் திடீர் என வெடித்து லாவாக்களை கக்கியது இந்த மாயோன் எரிமலை. இதனால் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு சாம்பல் படிந்தது. எரிமலை வெடிப்பால் கேமலிக் மற்றும் கைனோபட்டன் ஆகிய நகரங்களை சாம்பல் பெருமளவு மூடியது.
இதைத்தொடர்ந்து மாயோன் எரிமலையை சுற்றியுள்ள நிலப்பரப்பில் மனிதர்கள் வசிக்கக்கூடாது என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
Philippines Mayon volcano will erupt in couple of days. Mount Mayon in northeastern Albay province has been erupting more than two weeks, and 84,000 people who fled are staying in schools and other crowded shelters.