தமிழக அரசியலுக்கு தற்போது இவரை போல் ஒருவர்தான் தேவை- வீடியோ

  • 6 years ago
தமிழக அரசியலுக்கு ரஜினி, கமல் போன்ற பிரபலங்கள் வேண்டாம், மக்களின் பிரச்னைகளை அறிந்து செயல்படக் கூடிய ஜிக்னேஷ் மேவானி போன்றோர் தான் தேவை என்று டி.எம்.கிருஷ்ணா சொன்னது ஏற்கக் கூடியதா?. தமிழகத்தின் இன்றைய அரசியல், மக்கள் மனநிலைக்கு யார் தேவை என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.

தமிழக அரசியல் களம் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகும் கருணாநிதியும் தீவிர அரசியல் ஓய்வுக்குப் பின்னரும் ஒரு வலுவான தலைமை இல்லாத நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தேசிய கட்சிகள் தமிழகத்தில் கால்பதிக்க முடியாமல் இருந்ததற்கு முக்கிய சக்திகளாக இருந்தவர்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும். அந்த அளவிற்கு மாநில திராவிட அரசியல் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஆனால் இவர்களின் அரசியல் வெற்றிடம் பல ஆண்டுகளாக அரசியலில் நுழைய நினைத்தவர்களுக்கு வாய்ப்பாகியுள்ளது. திரைத்துறையில் கோலோச்சிய ரஜினியும், கமலும் அரசியலுக்கு வர ஆயத்தமாகியுள்ளனர். ஆனால் இவர்கள் எந்தப் பாதையில் பயணிக்கப் போகிறார்கள் என்பது தான் இதுவரை தெளிவுபடுத்தப்படாத விஷயம்.

Tamilnadu politics seeing many new faes in 2018 but the fact is really people want this type of leaders, to fullfill the needs of people the state requires a real hero neither a famous personality or heir politics.

Recommended