Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
தென்கொரிய மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் கொரியாவின் சியோல் நகரின் மிர்யாங் பகுதியில் செஜாங் என்ற மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நோயாளிகள் ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எமர்ஜென்சி சிகிச்சை பிரிவு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 11 பேரது நிலைமை மோசமடைந்து உள்ளது. 40 பேர் படுகாயமடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தினை அடுத்து அனைத்து நோயாளிகளும் மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பலர் வழியிலேயே இறந்துள்ளனர்.

Fire accident in South korea hospital at seoul kills 15. 11 persons are in critical situation. and over 40 injured severely it seems.

Category

🗞
News

Recommended