Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முத்தரசன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி இந்த கல்வியாண்டில் இதுவரை விலையில்லா சைக்கிள் வழங்கவில்லை. இன்னும் ஓரிருமாதங்களில் கல்வியாண்டு நிறைவடையப் போகிறது. எப்போது சைக்கிள் கிடைக்கும் என 7 லட்சம் மாணவர்கள் அரசின் நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர். விலையில்லா சைக்கிள்களை உற்பத்தி செய்து தரும் நிறுவனங்களுடன் நடந்து வரும் பேரம் முடியவில்லை என்றும் அதனால் தான் தாமதம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் ஆட்சி நடப்பதாக கூறிவரும் முதல்வர் விலையில்லா சைக்கிள் வழங்குவதில் ஏன் தாமதம் ஏற்படுத்துகிறார். பேரம் நடப்பதாகக் கூறுவதில் யார் யார் சம்மந்தப்பட்டிருக்கின்றனர்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை? விலையில்லா சைக்கிள் மாணவர்களுக்கு எப்போது கிடைக்கும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும் என்பதுடன், தாமதத்திற்கு காரணம் பேரம் தான் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு பேரம் நடத்திட்ட பெரும்புள்ளிகள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு முத்தரசன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


CPI State secretary R Mutharasan addressing a meeting

Category

🗞
News

Recommended