"பத்மாவத் படத்தை தடை செய்ய முடியாது" - சுப்ரீம் கோர்ட்!

  • 6 years ago
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உருவாகியிருக்கும் படம் 'பத்மாவத்'. பல எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் பத்மாவத் திரைப்படத்தை திரையிட அனுமதிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்யும்படி ராஜஸ்தான், மத்திய பிரதேச அரசுகள் மேல்முறையீடு செய்தன. பத்மாவத் படத்தை மறு ஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட். இதை எதிர்த்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அந்த மனுவில், பத்மாவத் திரைப்படத்தை திரையிட அனுமதிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்யும்படி கோரப்பட்டது. அதேசமயம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் இப்படத்தை திரையிட தொடர்ந்து எதிர்ப்பு குரல் வந்து கொண்டு இருக்கிறது. சில இடங்களில் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனால் பத்மாவத் படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


Madhya Pradesh and Rajasthan governments has appealed to the Supreme Court to oppose permission for screening of 'Padmaavat'. The judges have dismissed the petition saying there was no proposal to review the judgement. Thus, Padmaavat film will be released on January 25th.

Recommended