தமிழில் நடிக்க படையெடுக்கும் தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள நடிகர்கள்.

  • 6 years ago
ஹீரோக்களுக்கு தான் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஹீரோக்களுக்கும் இயக்குநர்களுக்குமான விகிதம் பெரிய வித்தியாசத்தில் இருக்கிறது. ஆண்டுக்கு 300 படங்களுக்கு மேல் ரிலீசாகும் நிலையில் மார்க்கெட் இருக்கும் ஹீரோக்களை கணக்கெடுத்தால் பத்து பேர் கூட தேற மாட்டார்கள். ஹீரோக்கள் கதைகளை தேர்ந்தெடுக்கும் லட்சணம் அப்படி... இந்த ஹீரோ சரியாக கதைகளை தேர்வு செய்கிறார் என்று விஜய்சேதுபதி தவிர யாரையுமே சொல்ல முடியவில்லை. ஏதோ ஒரு மாயையில் சிக்கியதை போல தவறான கதைகளை தேர்ந்தெடுத்து மாட்டிக்கொள்கின்றனர். இதை உணர்ந்த தெலுங்கு, கன்னட, மலையாள நடிகர்கள் சமீபகாலமாக அதிக அளவில் தமிழுக்கு படையெடுத்து வருகிறார்கள். அந்தந்த மொழிகளில் படங்கள் உருவாகும்போதே அப்படியே தமிழிலும் எடுக்குமாறு சொல்கின்றனராம். தமிழ் ஹீரோஸ் அலெர்ட் ஆகிக்குங்க...! கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க

Recommended