விக்கெட் கீப்பிங்ன்னா என்ன தெரியுமா?.. தல சொன்ன விளக்கத்தை பாருங்க..

  • 6 years ago
விக்கெட் கீப்பிங் குறித்து டோணி செமையான விளக்கம் கொடுத்துள்ளார். வெற்றிகரமான விக்கெட் கீப்பராக தான் ஜொலித்தது எப்படி என்பதையும் அவர் அதில் விளக்கியுள்ளார். வழக்கமான விக்கெட் கீப்பராக இல்லாமல் வித்தியாசமாக செயல்படுவர் டோணி. அதுவே அவரது ஸ்டைலாகவும் மாறியது. அவரது விக்கெட் கீப்பிங் ஸ்டைல் சில நேரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் கூட அவர் இந்தியாவின் வெற்றிகரமான விக்கெட் கீப்பராகவும் ஜொலிக்க அது வழி கோலியுள்ளது. தான் வெற்றிகரமான விக்கெட் கீப்பராக ஜொலிக்க என்ன காரணம் என்பதை இதுவரை வெளிப்படுத்தியதில்லை, வெளிப்படையாக டோணி பேசியதில்லை. ஆனால் தற்போது அதை வெளியிட்டுள்ளார்.

உலக அளவில் சிறந்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் 3வது இடத்தில் இருப்பவர் டோணி. முதலிடத்தில் 998 டிஸ்மிஸல்களுடன் மார்க் பெளச்சரும், 902 டிஸ்மிஸல்களுடன் ஆடம் கில்கிறைஸ்ட் 2வது இடத்திலும் உள்ளனர். 768 டிஸ்மிஸல்களுடன் டோணி 3வது இடத்தில் இருக்கிறார். இந்திய அளவில் இவர்தான் பெஸ்ட் விக்கெட் கீப்பர்.

சிறந்த விக்கெட் கீப்பராக ஜொலிப்பது குறித்த கேள்விக்கு தற்போது டோணி விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து டோணி கூறுகையில், நான் வழக்கத்திற்கு விரோதமான ஸ்டைலில் செயல்படுவதே எனது வெற்றியின் ரகசியம் என நினைக்கிறேன்.

dhoni elplaining about his wicket keeping style

Recommended