இனி வாட்ஸ் அப்பில் யூடியூப் பார்க்கலாம் | Oneindia Tamil

  • 6 years ago
ஐபோனில் வாட்ஸ்அப் ஆப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு யூடியூப் ஒருங்கிணைப்பு (Integration) வசதி வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் யூடியூப் ஒருங்கிணைப்பு வழங்கும் பணிகளை அந்நிறுவனம் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்தது. முதல்கட்டமாக ஐபோன்களில் மட்டும் இந்த வசதியை வழங்கும் பணிகள் துவங்கிவிட்டன. ஐபோன் வாடிக்கையாளர்கள் இனி தங்களது வாட்ஸ்அப் சாட்டிங் திரையில் இருந்தபடியே யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும்.

இதுவரை, வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக்களை யூடியூப் ஆப் அல்லது பிரவுசர்களில் சென்றுதான் பார்க்கமுடியும். அப்போது வாட்ஸ்அப் செயலியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் இருந்தது. யூடியூப் ஒருங்கிணைப்பு வசதி வாட்ஸ்அப் 2.18.11 பதிப்பில் வழங்கப்படுகிறது. இனி வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக்களின் லின்ங்குகளை கிளிக் செய்து வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமல் வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம்.

வீடியோ திரை முழுக்க பாப்-அப் ஆவதோடு பிளே, பாஸ், குளோஸ் மற்றும் முழு திரை உள்ளிட்ட அம்சங்களுக்கு ஏற்ற பொத்தான்களை கொண்டிருக்கிறது. மேலும் வீடியோ அளவை மாற்றியமைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

WhatsApp's YouTube integration feature is finally available for iPhone users. The messaging app has been planning to bring YouTube support to its chat interface for a long time now.

Recommended