சீனியாரிட்டி முறை இல்ல.. செல்லமேஷ்வருக்கு தலைமை நீதிபதி பொறுப்பு இல்லை
  • 6 years ago
சீனியாரிட்டி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டாலும் அதிர்ஷ்டசாலிகளே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாகின்றனர். சீனியாரிட்டி முறை முறையாக பின்பற்றப்பட்டிருந்தால் நீதிபதி செல்லமேஸ்வர் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருப்பாராம். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடு குறித்து 4 மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை கூறினர். வழக்குகள் ஒதுக்கீடு, நீதிமன்ற நிர்வாகம் போன்ற விஷயங்களில் தலைமை நீதிபதி தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இந்த நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
நீதிபதிகளின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதிகள் சீனியாரிட்டி அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர்.

சீனியாரிட்டி என்பது நீதித்துறையின் புனித தத்துவமாகும். உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சீனியாரிட்டி என்பது முக்கிய உணர்ச்சிமிகு பிரச்சனையாகும்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சீனியாரிட்டி அடிப்படையிலேயே நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். இதேபோல் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால் அதிர்ஷ்டசாலிகள் தான் உச்சநீதிமன்ற நீதிபதியாகின்றனர்.


Seniority is the important issue and the main principle for high court judges. If seniority had taken its course, Justice Chelameswar would have taken over CJI on January 4, 2017 after the retirement of then CJI T S Thakur; ie, before even Justice Khehar, who was succeeded by Justice Misra on August 28, 2017.
Recommended