வைரமுத்துவை தரக்குறைவாக பேசிய எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கண்டனம்- வீடியோ

  • 6 years ago
திரைப்பட கவிஞர் வைரமுத்துவை கடுமையாக விமர்சனம் செய்த எச்.ராஜாவை கண்டித்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆண்டாள் குறித்த கட்டுரையில் ஏற்கத்தகாத வார்த்தைகளை வைரமுத்து பயன்படுத்தியதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல இடங்களிலும் வைரமுத்துவிற்கு எதிராக இந்து அமைப்பினர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் பக்தர்கள் குடும்பத்தோடு தர்ணா நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. ஆண்டாள் குறித்த கருத்துக்கு, வைரமுத்து டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டார். அதேபோல, ராஜாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்கள் அந்த தரப்பில் இருந்து எழத்தொடங்கியுள்ளன. குறிப்பாக திரைப்பட துறையினரிடமிருந்து.

இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகிவிட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம், இரவெல்லாம் என்னைத் தூங்கவிடாமல் செய்தது. தமிழகத்தின் வரலாற்றில் புலவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் தோன்றி இறவாப்புகழ் அடைந்திருக்கிறார்கள். இன்று நம் கொடுப்பினை, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கவிஞன் கவிப்பேரரசு வைரமுத்து, தமிழைத் திசைகள்தோறும் தெரியப்படுத்தியவர்.


Film director Bharathiraja issues statement, condemning H. Raja who criticized movie poet Vairamuthu. Article on Aandal by Vairamuthu spark fire in Tamilnadu

Recommended