தினகரனின் எம்.எல்.ஏ பதவி பறி போக வாய்ப்பு...வீடியோ

  • 6 years ago
ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரான டி.டி.வி.தினகரன் ரூ.28 லட்சத்திற்கு மேல் செலவு செய்திருப்பது உறுதியானால் அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார். 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது. ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் செலவு விவரங்களை ஆய்வு செய்ய செலவின பார்வையாளர்கள் 23ம் தேதி சென்னை வருகிறார்கள். ஆர்.கே. நகரில் டி.டி.வி.தினகரன் ரூ.28 லட்சத்துக்கு மேல் செலவு செய்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ஓட்டுக்கு நோட்டு கத்தை கத்தையாக பறந்துள்ளது. ஹவாலா முறையில் வாக்காளர்களுக்கு பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 6000 ரூபாய், 20 ஆயிரம் ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.

TTV Dinakaran is in the danger of disqualification if proved he bribed the RK Nagar voters during the By election. He may face jail sentence too if convicted

Recommended