சீமான், ரஜினியை வேண்டாம் என சொல்ல இவ்வளவு காரணமா?- வீடியோ

  • 6 years ago
ஒரு வீட்டில் அப்பா சரியில்லை என்றால் மூத்த மகன் காப்பாற்ற மாட்டானா? பக்கத்து வீட்டுக்காரன், அண்டை வீட்டுக்காரன் தேவையில்லை என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு பல அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். வரவேற்பும், எதிர்ப்பும் கலந்த கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

அதே நேரத்தில் தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்று கூறி வரும் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தை காப்பாற்ற ரஜினி தேவையில்லை, நாங்களே பார்த்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரஜினியை எதிர்பதற்கான காரணத்தையும் விளக்கினார்.தமிழ்நாட்டில் தமிழ்தாய் ஆட்சி நடக்கிறது. மற்ற இனத்தவர்களுக்கு தமிழ் இனம் மண்டியிடக்கூடாது. அப்படி மண்டியிட்டால் பெற்றோர் மேல் ஐயம், பிறப்பின் மேல் ஐயம் என்று கூறியுள்ளார் பாவலர் ஐயா.

ஓடாத மானும், போராடாதவர்களும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. போராடுபவர்கள் பைத்தியக்காரர்களா? கதிராமங்கலம், கூடங்குளம் போராட்டங்கள் பற்றி ரஜினியின் கருத்து என்ன? நிலைப்பாடு என்ன?

நாட்டில் சரியான வகுப்பறையில்லை. நிலவளம், மண்வளம் சரியில்லை. ஆறுகள், மலைகள், காடுகளை அழித்துக்கொண்டிருக்கிறோம். அதைப்பற்றி சிந்திக்காமல் எப்படி ஆள முடியும்.



Naam Tamilar leader Seeman has slammed actor Rajinikanth for his venture into politics and said that Rajini need not worry about Tamil Nadu and there are people who can take care of the state better than the actor.

Recommended