தங்கள் அணியை சேர்ந்தவர்களை அதிமுகவில் இருந்து தொடர்ந்து எடப்பாடியும் பன்னீர் செல்வமும் நீக்கி வெட்டி வேலை பார்த்து வருவதாக நாஞ்சில் சம்பத் ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் ஆவேசமாக பேசினார்.
நடைபெற்று முடிந்த ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் திமுக வேட்பாளரை விட சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டிடிவி தினகரன் வெற்றியையடுத்து அவரது ஆதரவாளர்களை தொடர்ந்து ஒபிஎஸ் இபிஎஸ் அணியினர் அதிமுகவில் இருந்து நீக்கி வருகின்றனர். மாவட்ட செயலாளர் பதவி முதல் அடிப்படை உறுப்பினர் வரை பதவி வகித்து வந்த டிடிவி ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக தினமும் அறிவித்து வருகின்றனர். இது குறித்து டிடிவி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் ஒன் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் ஆவேசமாக பேசியதை பாருங்கள்…
Des : Speaking of a special interview with Sampath One in Nanni, he said that he has been working to remove the penny from the top of the team and continue to work