Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/29/2017
: மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. ஜனவரி14ஆம் தேதி பிரசித்திப் பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின.

41 நாள் நீண்ட மண்டலக் காலம் கடந்த 26ம் தேதி நடந்த மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. அன்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டது. 3 நாள் இடைவெளிக்கு பின்னர் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 31ம் தேதி முதல் மகர விளக்கு பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறும்.

Category

🗞
News

Recommended