தமிழகத்தில் நல்ல வலிமையான தோளில் சவாரி செய்வதற்காக கூட்டணிப் பேச்சுகளை "நாயுடு" மூலமாக மும்முரமாக நடத்தி வருகிறதாம் பாஜக. கேரளாவில் கூட ஈழவர் சமூக கட்சியுடன் கூட்டணி என ஒன்றை வைத்து தேர்தலை சந்தித்து பார்த்தது பாஜக. ஆனால் தமிழகத்தில் தீண்டத்தகாத கட்சியாகவே பாஜக இருந்து வருகிறது.பாஜகவுக்கு கொல்லைப்புறமாக ஆதரவு தந்தால்கூட அந்த கட்சிகளை தூக்கி எறிவதில்தான் தமிழக மக்கள் முனைப்புடன் இருக்கிறார்கள். டெல்லியிடம் குடுமியை பறிகொடுத்துவிட்டு பம்முகிற கட்சிகளுக்கும் இதேகதிதான்.என்னதான் இந்த பேரவலத்தை உணர்ந்திருந்தாலும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பேந்த பேந்த முழித்து கொண்டிருக்கின்றன சில கட்சிகள். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் மரண அடி நிச்சயம் என இந்த கட்சிகள் அலறிக் கொண்டிருந்தாலும் எங்களுடன் சேர்ந்தே ஆக வேண்டும் என டெல்லியில் இருந்து நெருக்கடிக்கு மேல் நெருக்கடியாம்.
The Bharatiya Janata Party began alliance talks with the one of the main political party in Tamil Nadu, sources said.